Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'நடமாடும்' உணவு பாதுகாப்புத்துறை? அலுவலகம் இல்லாத அவலம்

'நடமாடும்' உணவு பாதுகாப்புத்துறை? அலுவலகம் இல்லாத அவலம்

'நடமாடும்' உணவு பாதுகாப்புத்துறை? அலுவலகம் இல்லாத அவலம்

'நடமாடும்' உணவு பாதுகாப்புத்துறை? அலுவலகம் இல்லாத அவலம்

ADDED : ஜூலை 05, 2024 12:43 AM


Google News
பல்லடம்:உணவுப் பொருட்களில் கலப்படம், கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வது, கூடுதல் விலை வைத்து விற்பது, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு, உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதால், நுகர்வோர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காமல் இருப்பதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இருக்க, பல்லடத்தில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலகமே இல்லாமல் கடந்த ஒரு ஆண்டாக இயங்கி வருகிறது.

நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் கூறியதாவது:

பொதுமக்கள், அதிகாரிகளை எளிதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வசதியாக உணவு பாதுகாப்பு அலுவலகம் செயல்பட வேண்டும். ஆனால், பல்லடத்தில் நடமாடும் அலுவலகமாக உணவு பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது.

ஆனால், 6 லட்சம் மக்கள் வசிக்கும் பல்லடத்தில், ஒரே ஒரு வட்டார அலுவலர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கும், அலுவலகமோ, உதவியாளர்களோ கிடையாது. பல்லடத்தில் எத்தனையோ அரசு நிலங்கள், கட்டடங்கள், கடைகள் இருக்க, அலுவலகமே இல்லாமல் இயங்கி வருகிறது உணவு பாதுகாப்பு துறை.

இதில், எவ்வாறு தரமான உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை உணவு பாதுகாப்புத் துறை உறுதி செய்ய முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்லடத்தில் அலுவலகம் அமைக்கவும், மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us