/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மங்கலம் ரோட்டில் டிவைடர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த மக்களால் பரபரப்பு மங்கலம் ரோட்டில் டிவைடர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த மக்களால் பரபரப்பு
மங்கலம் ரோட்டில் டிவைடர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த மக்களால் பரபரப்பு
மங்கலம் ரோட்டில் டிவைடர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த மக்களால் பரபரப்பு
மங்கலம் ரோட்டில் டிவைடர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த மக்களால் பரபரப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:45 AM

திருப்பூர்:மங்கலம் ரோட்டில், பிரதான ரோடு அருகே இடைவெளி விடாமல் டிவைடர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் நகரின் பிரதான ரோடுகளில் ஒன்றாக மங்கலம் ரோடு உள்ளது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த ரோடு விரிவாக்கம் செய்யும் பணி, பகுதி பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணி தற்போது ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்ட ரோட்டில் மையப் பகுதியில் டிவைடர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. டிவைடர் ஆங்காங்கே குறுக்கு ரோடுகள் சந்திக்கும் இடங்களில் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், அய்யன் நகர் வழியாகச் செல்லும் ரோடு பிரியும் இடத்தில் இடைவெளி விடாமல் டிவைடர் அமைக்கப்பட்டது. மங்கலம் ரோடு, பாரப்பாளையம் பகுதியிலிருந்து அய்யன் நகர் வழியாக பல்வேறு குடியிருப்புகளைக் கடந்து ஏ.பி.டி., ரோடு சென்று சேரும் வகையில் இந்த ரோடு உள்ளது. தினமும் ஏராளமானோர் இந்த ரோட்டைப் பயன்படுத்துவர்.
இந்த இடத்தில் வாகனங்கள் கடந்து செல்ல இடைவெளி இல்லை என்றால் பெரும் சிரமம் நிலவும் என்று அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். இதனையறிந்த, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி அப்பகுதிக்கு விரைந்தார்.
இப்பிரச்னை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், நெடுஞ்சாலைத் துறையினரைத் தொடர்பு கொண்டு பேசியதும், அந்த இடத்தில் இடைவெளி ஏற்படுத்தப்பட்டது.