ADDED : ஜூன் 07, 2024 12:39 AM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான வெள்ளி விழாப் பூங்கா, நொய்யல் கரை ஓரத்தில் அமைந்துள்ளது. வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகை உள்ளது.
தற்போது பள்ளிகளில் கோடை விடு முறைக்காலம் என்பதால், காலை முதல் மாலை வரை ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் பொழுது போக்க இங்கு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பூங்கா வளாகத்தில் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. பொழுது போக்கவும், ஓய்வுக்காகவும் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் அவதிப்பட்டனர்.
நேற்று பூங்கா வளாகம் முழுவதும் கருவி மூலம் புகையடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.