/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநகராட்சியுடன் இணைப்பா? ஊராட்சிகள் எதிர்ப்பு மாநகராட்சியுடன் இணைப்பா? ஊராட்சிகள் எதிர்ப்பு
மாநகராட்சியுடன் இணைப்பா? ஊராட்சிகள் எதிர்ப்பு
மாநகராட்சியுடன் இணைப்பா? ஊராட்சிகள் எதிர்ப்பு
மாநகராட்சியுடன் இணைப்பா? ஊராட்சிகள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:39 AM
பல்லடம்;திருப்பூர் மாநகராட்சியை விரிவுபடுத்தும் நோக்கில், அருகிலுள்ள சில ஊராட்சிகளை இணைக்க உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம், வேலம்பாளையம், கரைப்புதுார், கணபதிபாளையம் ஊராட்சிகளும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள உத்தேச பட்டியலில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே சில ஊராட்சி பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளி யானது. தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விளக்க கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்,' என்றனர்.
இதற்கிடையே, பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், எல்லை விரிவாக்கத்துக்காக ஊராட்சி இணைக்கப்படும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.