/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 66 ஆயிரம் கால்நடைகளுக்கு இலக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 66 ஆயிரம் கால்நடைகளுக்கு இலக்கு
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 66 ஆயிரம் கால்நடைகளுக்கு இலக்கு
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 66 ஆயிரம் கால்நடைகளுக்கு இலக்கு
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 66 ஆயிரம் கால்நடைகளுக்கு இலக்கு
ADDED : ஜூன் 08, 2024 12:13 AM
உடுமலை:உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, 66 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும், 10ம் தேதி முதல், 21 நாட்களுக்கு இப்பணிகள் நடக்கும் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் அளிக்கும் வகையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது.
கால்நடை வளர்ப்பில், கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை எனப்படும், வைரஸ் நச்சு உயிரியால் ஏற்படும் கோமாரி நோய் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெரும்பாலும் கலப்பின மாடுகளை, கால் மற்றும் வாய் கோமாரி நோய் அதிகம் தாக்கி வரும் நிலையில், இதனால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறைந்து, சினை பிடிப்பு தடைபடுகிறது. எருதுகளின் வேலைத்திறன் குறைவதோடு, இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் அதிகரிக்கும்.
அதனால் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை என ஆண்டுக்கு இரு முறை, அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக, தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்வு, 5-வது சுற்று, கோமாரி நோய் தடுப்பூசி, வரும் 10ம் தேதி முதல், இம்மாதம் முடிய, 21 நாட்களுக்கு அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார கிராமங்களிலுள்ள, 63 ஆயிரம் கால்நடைகளுக்கு, 22 கால்நடை மருந்தகங்கள் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கிராமங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்தும், தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறும், மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை உதவி மருத்துவரை அணுகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.