ADDED : ஜூன் 08, 2024 12:13 AM
உடுமலை;உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் நாளை நடக்கும், இலவச கண்சிகிச்சை முகாமில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
உடுமலை அருகே பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நாளை, (9ம் தேதி) இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், டாக்டர்களால் கண் சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
பெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்கம், உடுமலை அரசு கலைக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்க அறக்கட்டளை, கோவை சங்கரா கண் மருத்துவ மையம், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் சார்பில் நடக்கும் இந்த முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.