/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இல்லை: மணிமண்டபத்தில் வசதி தேவை போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இல்லை: மணிமண்டபத்தில் வசதி தேவை
போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இல்லை: மணிமண்டபத்தில் வசதி தேவை
போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இல்லை: மணிமண்டபத்தில் வசதி தேவை
போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இல்லை: மணிமண்டபத்தில் வசதி தேவை
ADDED : ஜூன் 08, 2024 12:15 AM

உடுமலை;உடுமலை நாராயணகவி மணி மண்டபத்தில், போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் புத்தகங்கள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் விடுதலை போராட்டத்துக்காக, தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவியின் நினைவாக, குட்டைதிடலில் மணிமண்டபம் கட்டப்பட்டு, 2001ல், திறக்கப்பட்டது.
அந்த மண்டபத்தில், அவர் எழுதிய நுால்கள் வைக்கப்பட்டது. அதன்பின், நுாலகத்துறை சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும், அங்கு பல்வேறு நுால்கள் வைக்கப்பட்டிருந்தது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நுாலகமும் துவக்கினர். தற்போது, செய்தித்துறையின் கீழ் மணிமண்டபம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு பிரிவுகளிலும் புத்தகங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. நாள்தோறும் காலை நேரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள், போட்டித்தேர்வர்கள் புத்தகம் வாசிப்பதற்கு வருகின்றனர்.
ஆனால், போட்டித் தேர்வர்களுக்கு தேவையான புத்தகங்கள் குறைவாகவே உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே உள்ளன. தற்போது, மாறியுள்ள பாடத்திட்டத்துக்கு ஏற்ப, புதிய புத்தகங்கள் இல்லை.
இதனால், போட்டித்தேர்வர்கள் முழுமையாக பயன்பெற முடியாமல் உள்ளனர். கூடுதல் புத்தகங்கள், இடவசதி மற்றும் இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுத்தால், நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடத்தவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.