/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இருப்பு வைத்த தேங்காய் உரிப்பு உற்பத்தி பாதிப்பால் மாற்றம் இருப்பு வைத்த தேங்காய் உரிப்பு உற்பத்தி பாதிப்பால் மாற்றம்
இருப்பு வைத்த தேங்காய் உரிப்பு உற்பத்தி பாதிப்பால் மாற்றம்
இருப்பு வைத்த தேங்காய் உரிப்பு உற்பத்தி பாதிப்பால் மாற்றம்
இருப்பு வைத்த தேங்காய் உரிப்பு உற்பத்தி பாதிப்பால் மாற்றம்
ADDED : ஜூன் 08, 2024 12:12 AM

உடுமலை;தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால், கொப்பரை உற்பத்திக்காக இருப்பு வைத்த காய்களை உரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வறட்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், தென்னை சாகுபடி கடுமையாக பாதித்துள்ளது. வழக்கமாக, ஏப்., மே மாதங்களில், தேங்காய் உற்பத்தி அதிகளவு இருக்கும்.
ஆனால், இந்தாண்டு வறட்சி மற்றும் அதிக வெப்பத்தால், தேங்காய் உற்பத்தி வழக்கத்தை விட வெகுவாக குறைந்து விட்டது. இதனால், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமானது.
இந்நிலையில், கொப்பரை உற்பத்திக்காக, இருப்பு வைத்த தேங்காய்களை உரிக்கும் பணியை விவசாயிகளும், வியாபாரிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர். பருவமழை சீசன் துவங்கும் போது, தேங்காய் மற்றும் கொப்பரை விலை அதிகரிக்கும்.
இந்தாண்டும், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால், விலை நிலவரத்தில் பெரிய மாற்றம் இல்லை.
எனவே மழை தீவிரமடையும் முன், இருப்பு வைத்த தேங்காய்களை விற்பனை செய்வதற்கான பணிகளை துவக்கியுள்ளோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.