ADDED : ஜூலை 17, 2024 11:58 PM

அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோட்டில் சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான கூடம் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், மதுபான கூடத்தினை மூடும் வரை போராட்டம் நடத்துவது, ரெஸ்டாரன்ட் உள்ளிட்ட உணவு விடுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கால்நடை மருத்துவமனை எதிரில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையை அகற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு நகர பா.ஜ., தலைவர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். நீலகிரி லோக்சபா தொகுதி இணை அமைப்பாளர் கதிர்வேலன், மாவட்ட துணை தலைவர்கள் சண்முகசுந்தரம், சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், சீனிவாசன், பொதுச் செயலாளர் மோகன் குமார், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் புகழேந்தி, இளைஞரணி அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.