/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தீவன விலை உயர்வு கோழி விலை சரிவு! பண்ணையாளர்கள் கவலை தீவன விலை உயர்வு கோழி விலை சரிவு! பண்ணையாளர்கள் கவலை
தீவன விலை உயர்வு கோழி விலை சரிவு! பண்ணையாளர்கள் கவலை
தீவன விலை உயர்வு கோழி விலை சரிவு! பண்ணையாளர்கள் கவலை
தீவன விலை உயர்வு கோழி விலை சரிவு! பண்ணையாளர்கள் கவலை
ADDED : ஜூலை 17, 2024 11:58 PM
பொங்கலுார்: கோழித் தீவனம் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள் மக்காச்சோளம். இந்தாண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வற்றி வருகிறது. சில இடங்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், வைகாசி பட்ட சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்காச்சோள வரத்து குறைந்துள்ளது.
இதனால், மக்காச்சோளத்தின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. கிலோ, 23 ரூபாய்க்கு விற்பனையான மக்காச்சோளம் தற்பொழுது, 26.50 ரூபாய்க்கு விலை போகிறது. வட மாநிலங்களில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
மக்காச்சோள விலை உயர்வால் கோழித் தீவன விலையும் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது கோழி பண்ணையாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
தற்பொழுது பண்ணை கோழிகளின் விலை கிலோவிற்கு, 15 ரூபாய் வரை சரிந்துள்ளது. தீவன விலை உயரும் பட்சத்தில் உற்பத்தி செலவு அதிகரிக்கும்.
தீவனச் செலவு அதிகரிப்பு, கொள்முதல் விலை குறைவு போன்றவற்றால் கோழிப் பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.