/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பிசினஸ்' பேசலாம் வாங்க! 20ம் தேதி தொழில் வழிகாட்டும் கருத்தரங்கு 'பிசினஸ்' பேசலாம் வாங்க! 20ம் தேதி தொழில் வழிகாட்டும் கருத்தரங்கு
'பிசினஸ்' பேசலாம் வாங்க! 20ம் தேதி தொழில் வழிகாட்டும் கருத்தரங்கு
'பிசினஸ்' பேசலாம் வாங்க! 20ம் தேதி தொழில் வழிகாட்டும் கருத்தரங்கு
'பிசினஸ்' பேசலாம் வாங்க! 20ம் தேதி தொழில் வழிகாட்டும் கருத்தரங்கு
ADDED : ஜூன் 16, 2024 11:57 PM
திருப்பூர்:திருப்பூர் 'சைமா' சங்கத்தில், பின்னலாடை தொழில்துறையினருக்கான, வழிகாட்டும் கருத்தரங்கு, வரும் 20ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் பனியன் தொழில், ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதிய சவால்களை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டு வருவது வழக்கம். அதன்படி, கொரோனா தொற்று துவங்கி, பஞ்சு விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என, பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளது. கடுமையான போராட்டத்தால், தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. பழைய பார்முலாவையே தொடர்ந்து பயன்படுத்தாமல், வெளிநாடு மற்றும் வெளிமாநில மக்களுக்கான மாற்றங்களை கண்டறிந்து, புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த வேண்டியது அவசியம்.
அதற்காக, பனியன் தொழிலின் தாய் சங்கமாக சைமா சங்கம் சார்பில், வழிகாட்டி கருத்தரங்கு 'பிசினஸ் பேசலாம் வாங்க...' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
அதன்படி, வரும், 20ம் தேதி 'உன்னத தொழில் வளர்ச்சிக்கு ஒரு யோசனை' என்ற பெயரில், வழிகாட்டி கருத்தரங்கு நடக்க உள்ளது.
அன்றைய தினம் மாலை 4:30 மணிக்கு நடக்கும் கருத்தரங்கில், சென்னையை சேர்ந்த பிரபல தொழில் வர்த்தக ஆலோசகர் கிருஷ்ணா வரதராஜன், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்குஆலோசனை வழங்கு இருக்கிறார்.
சங்க உறுப்பினர்கள் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம் என, 'சைமா' சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.