/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாகுபடிக்கு அடியுரம் இடும் பணி விளைச்சல் அதிகரிக்க பணி சாகுபடிக்கு அடியுரம் இடும் பணி விளைச்சல் அதிகரிக்க பணி
சாகுபடிக்கு அடியுரம் இடும் பணி விளைச்சல் அதிகரிக்க பணி
சாகுபடிக்கு அடியுரம் இடும் பணி விளைச்சல் அதிகரிக்க பணி
சாகுபடிக்கு அடியுரம் இடும் பணி விளைச்சல் அதிகரிக்க பணி
ADDED : ஜூன் 16, 2024 11:41 PM
உடுமலை;விளைநிலங்களில், ஒரே வகையான பயிர் சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்வதால், மண் வளம் குறைகிறது. ஓராண்டு இடைவெளிக்கு பிறகு, மேற்கொள்ளப்படும் சாகுபடியில், மண் வளம் குறைவால், மகசூல் குறைவு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக, சாகுபடிக்கு முன்பு, அடியுரம் இட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். வரும் ஆக., மாதத்தில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இப்பாசன பகுதியில், மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதே போல், ஆடிப்பட்டத்திலும், பல்வேறு தானிய சாகுபடிக்காக விதைப்பு செய்வார்கள்.
இதில், அதிக மகசூல் பெற, தற்போதே அடியுரம் இட்டு, உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். முன்பு, மாட்டுச்சாணம் உட்பட தொழு உரங்களை விளைநிலத்தில் வீசி உழவு செய்வது வழக்கம்.
தற்போது, கறிக்கோழி பண்ணைகளில் கிடைக்கும், கோழி எருவையும், அடியுரமாக அதிகளவு பயன்படுத்துகின்றனர். பருவமழை தீவிரமடைந்தால், விதைப்பு பணிகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.