ADDED : ஜூன் 16, 2024 11:59 PM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, ராயபுரம் பகுதியில் விநாயகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதில் நொய்யல் ஆற்றைக் கடந்து ராயபுரம் இணையும் வகையில் தீபம் பாலம் உள்ளது.
இந்த பாலம் வழியாக வரும் ரோடு, விநாயகபுரத்தில் சேரும் பகுதியில் தற்போது மழைநீர் வடிகால் கட்டும் பணி நடக்கிறது. ரோட்டின் குறுக்கில், சிறுபாலம் கட்டும் பணி நடக்கிறது.
இதனால், இந்த ரோடு வழியாக வாகனப் போக்கு வரத்து சில நாட்களாக தடை செய்யப்பட்டிருந்தது. சிறுபாலம் கட்டும் பணி முடிந்து தற்போது, 'கியூரிங்'செய்ய நீர் நிரப்பி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பாலம் மீது தற்போது சிலர் வாகனங்களை ஓட்டிசெல்கின்றனர்.
பாலம் கட்ட தோண்டிய குழி முழுமையாக மூடாமல், போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாமல், உள்ள வழியாக, வாகனங்கள் செல்வது ஆபத்தை ஏற்படுத்தும்.
'கியூரிங்' முழுமையடையாத பாலம் மீது வாகனங்கள் சென்றால் கட்டுமானமும் பலவீனமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல், ஆபத்தான வகையில், செல்வதை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும்.