/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீசை தாக்கி ரகளை : போதை ஆசாமி கைது போலீசை தாக்கி ரகளை : போதை ஆசாமி கைது
போலீசை தாக்கி ரகளை : போதை ஆசாமி கைது
போலீசை தாக்கி ரகளை : போதை ஆசாமி கைது
போலீசை தாக்கி ரகளை : போதை ஆசாமி கைது
ADDED : ஜூலை 29, 2024 11:19 PM
திருப்பூர்:திருப்பூரில் வாகன தணிக்கையின் போது, போலீசாரை தாக்கி அடாவடியில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் வடக்கு போக்குவரத்து எஸ்.ஐ., ரமேஷ். நேற்று முன்தினம் அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி., சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, போக்குவரத்து இடையூறு செய்த டூவீலரில் வந்த, இருவரை பிடித்து நிறுத்தினர்.
டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த போதையில் இருந்த நபர், எஸ்.ஐ., உட்பட போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். ரோட்டில் இருந்தை கல்லை எடுத்த தாக்க முயற்சித்ததோடு, போலீசாரின் மொபைல் போன் ஆகியவற்றை கீழே தள்ளி விட்டு தாக்கினார்.
அதன்பின், தான் அணிந்திருந்த பனியனை கழற்றியவாறு, போலீசாரை ஒருமையில் பேசி அடாவடியில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், பொறுமையை இழந்த போலீசார், அவரை 'கவனித்து' ரோட்டோரம் உட்கார வைத்தனர்.
புகாரின் பேரில், அனுப்பர்பாளையம் போலீசார் திருப்பூர், பாரதிதாசன் நகரை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளியான ரமேஷ், 50, என்பவரை நேற்று கைது செய்தனர்.