Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறன் பயிற்சி திட்டத்தால் திருப்பூர் அதிகம் பயனடையும்!

திறன் பயிற்சி திட்டத்தால் திருப்பூர் அதிகம் பயனடையும்!

திறன் பயிற்சி திட்டத்தால் திருப்பூர் அதிகம் பயனடையும்!

திறன் பயிற்சி திட்டத்தால் திருப்பூர் அதிகம் பயனடையும்!

ADDED : ஜூலை 29, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:மத்திய அரசின் பட்ஜெட்டில், திறன் மேம் பாட்டுக்கு, அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது; இந்தாண்டு மட்டும், 4.1 கோடி இளைஞர்களுக்கு, பயிற்சி அளிக்க, இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறுகியகால திட்டத்தில், திறன் வளர்க்க முடியும்.

திருப்பூர் பனியன் தொழில் எதிர்காலத்துக்கு, திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர் மிகவும் அவசியம். அதற்கு, திறன் வளர்ப்பு திட்டம் கைகொடுக்கும். தொழிலாளராக வருவோர் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்து முதன்முதலாக வரும்போது, 15 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான, முதல்மாத சம்பளத்தை அரசே வழங்கும்.

முத்ரா கடன் வரம்பும், 20 லட்சமாக உயர்ந்துள்ளது, தொழில் முனைவோருக்கு வரப்பிரசாதம். 'பிளக் அண்ட் பிளே' என்ற அடிப்படையில், தொழில்பூங்கா துவங்கப்படும்; இதன்மூலம், மெஷின்களை நிறுவி, உடனுக்குடன் உற்பத்தியை துவக்க வாய்ப்புள்ளது.

நலிந்த தொழிலுக்கு நற்கதி கிடைக்கும்


இதுகுறித்து லகு உத்யோக் பாரதியின் தேசிய இணை பொதுசெயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் களுக்கு, அதிக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிணையமில்லாத கடன் வழங்குவது, நலிந்துள்ள தொழில்களை பாதுகாக்கும். மேலும், 11.1 லட்சம் கோடி ரூபாய், தொழில்சார்ந்த உள்கட்டமைப்பு வசதிக்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

இதனால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள், 60 சதவீதத்துக்கு மேற்பட்ட திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை கொண்டுள்ளன. இந்தியாவில், 3 சதவீதம் பேர் மட்டும் திறன் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

இனி, திறன் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை உயரும். செயல்படாத கணக்கை புதுப்பிக்க, 'ரீ பண்ட்' வழங்கும் திட்டத்தால், 'பேமென்ட்' தாமதம் நீங்கும். தங்குமிட வசதி அறிவிப்பும், வடமாநில தொழிலாளர் களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us