ADDED : மார் 13, 2025 11:34 PM
உடுமலை; மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், மானிய திட்டங்களில் பயன்பெறும் வகையில், விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி நடந்து வருகிறது.
இத்திட்டத்தில், விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யும் பணி, வேளாண் துறை அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் நடந்து வருகிறது.
மத்திய அரசின், பி.எம்., கிஷான் நிதி உதவி பெறும் விவசாயிகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், நாளைக்குள் (15ம் தேதி) விபரங்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே, நடப்பு தவணை நிதி வங்கியில் செலுத்தப்படும் என்பதால், அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து கொள்ளுமாறு, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.