/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு; ஆய்வும், நிதியும் ஒதுக்க வலியுறுத்தல் நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு; ஆய்வும், நிதியும் ஒதுக்க வலியுறுத்தல்
நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு; ஆய்வும், நிதியும் ஒதுக்க வலியுறுத்தல்
நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு; ஆய்வும், நிதியும் ஒதுக்க வலியுறுத்தல்
நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு; ஆய்வும், நிதியும் ஒதுக்க வலியுறுத்தல்
ADDED : மார் 13, 2025 11:34 PM
உடுமலை; தென்னையில் பல்வேறு நோய் தாக்குதலால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், விரிவான ஆய்வும், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் மதுசூதனன் கூறியதாவது:
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல், ஈரியோபைட் நோய் தாக்குதல், வேர் வாடல் நோய், குருத்து அழுகல், ஊசி நோய், பூங்கொத்து கருகுதல், கருந்தலைப் புழு தாக்குதல், கேரளா வாடல் நோய், சிவப்பு கூன் வண்டு என பல்வேறு நோய்த்தாக்குதலால் தென்னை மரங்கள் தொடர்ந்து பாதித்து வருகின்றன.
இதனால், 70 சதவீதம் மரங்கள் காய்ப்பு இழழந்து விட்டன. ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு சராசரியாக, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, 150 காய்கள் மகசூல் எடுத்து வந்தனர்.
தற்போதைய நோய்த்தாக்குதல் காரணமாக, 30 காய்களே கிடைக்கிறது. மேலும், நோய் தாக்குதலுக்கு முன், ஒரு தேங்காய், 400 முதல், 700 கிராம் வரை இருந்தது. கடந்த, 10 ஆண்டுகளில், வெள்ளை ஈ தாக்குதலால் ஒரு தேங்காய், 200 முதல் 400 மட்டுமே எடை உள்ளது.
மரங்கள் காய்ப்பு இழந்து விட்டதுடன், காய்களின் எடையும் குறைந்து விட்டது. மேலும், பராமரிப்பு மற்றும் அறுவடை செலவினங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. மகசூல் குறைந்த நிலையில், விலை உயர்வால் விவசாயிகளுக்கு பயனில்லை.
தற்போது, தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ள நிலையில், மத்திய அரசு தென்னை வளர்ச்சி வாரியம், வேளாண் பல்கலை, தோட்டக்கலைத்துறையும் பரிந்துரை செய்த தொழில் நுட்பங்கள், மருந்துகளை பயன்படுத்திலும், பயனில்லை. பொருளாதார இழப்பு மட்டுமே அதிகரித்துள்ளது.
எனவே, ரூக்கோஸ் சுருள் வெள்ளைஈக்களை கட்டுப்படுத்த, புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். தென்னை பயிர் செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் ஒருங்கி ணைந்த கட்டுப்பாட்டு முறைகளை செயல்படுத்தும் வகையில், அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
ஒரு தனி தென்னை மரம் காய்ந்தாலும், இழப்பீடு கிடைக்கும் வகையில், பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.