/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிராமங்களிலும் அதிகரித்த நெகிழிப்பைகள் கிராமங்களிலும் அதிகரித்த நெகிழிப்பைகள்
கிராமங்களிலும் அதிகரித்த நெகிழிப்பைகள்
கிராமங்களிலும் அதிகரித்த நெகிழிப்பைகள்
கிராமங்களிலும் அதிகரித்த நெகிழிப்பைகள்
ADDED : ஜூன் 03, 2024 01:11 AM

பல்லடம்:சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட் களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவு என்பது பெயரளவுக்கு மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. தொழில், வியாபாரம் நிறைந்த நகரப் பகுதி களில் தான் இந்த அவல நிலை என்றால், விவசாயம் கால்நடை வளர்ப்பு தொழில் நிறைந்த கிராமப்புறங்களிலும் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளன.
கிராமப்புறங்களில் நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, பயன்படுத்திய பின் துாக்கி எறியப்படும் நெகிழிப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை, மேய்ச்சல் நிலங்களை சூழ்கின்றன.
புல் - பூண்டுகளை உண்ணும் என்ற எண்ணத்துடன் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள், நெகிழிப்பைகளை உண்டு பாதிப்புக்கு உள்ளாகும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. காற்றில் பறந்து பரவும் நெகிழிப்பைகள் விளை நிலங்களையும் விட்டு வைக்காததால், நிலங்களையும் பாழ்படுத்துகின்றன.
தீர்வு என்ன?
உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நெகிழிப்பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர். சொற்ப அளவிலான அபராத தொகையை செலுத்தும் வியாபாரிகள் சிலர், மீண்டும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், பிளாஸ்டிக் பொருட்களை தான் விற்பனை செய்கின்றனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் மொத்த ஏஜென்ட்களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.