/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளி மாணவர் மன்ற துவக்கம் 'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளி மாணவர் மன்ற துவக்கம்
'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளி மாணவர் மன்ற துவக்கம்
'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளி மாணவர் மன்ற துவக்கம்
'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளி மாணவர் மன்ற துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 05:10 AM

திருப்பூர், : திருப்பூர், அம்மாபாளையம், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் மாணவர் மன்றம் துவக்க விழா நடந்தது.
பள்ளி நிர்வாக இயக்குனர் ஜனாபாரத், செயலாளர் தினகரன், பள்ளி ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களிடம், 'மாணவ, மாணவியரிடம் போட்டி மனப்பான்மையை வளர்த்து, அவர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொணர வேண்டும். மாணவர்களுக்குள் ஐந்து அணிகளை உருவாக்கி, அவர்களை வழிநடத்த வேண்டும்,' என அறிவுரை வழங்கினர்.
புதிதாக தேர்வு பெற்ற மாணவர் மன்ற பிரதிநிதிகளுக்கு உறுதிமொழி ஏற்று, பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். முன்னதாக மாணவர் தலைவர் பிரனித் வரவேற்றார். பள்ளி முதல்வர் ராஜேந்திர பிரசாத், 'மாணவர் மன்ற பிரதிநிதிகள் தங்கள் சார்ந்த குழுக்களுக்கு நல்ல வழிகாட்டி செயல்பட்டு, திறம்பட நடத்தி, பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்,' என்றார். மாணவியர் தலைவர் பிரத்னாஸ்ரீ நன்றி கூறினார்.