/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
ADDED : ஜூன் 20, 2024 05:10 AM

பல்லடம் : பல்லடம், அருள்புரம் உப்பிலிபாளையம் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் குமரேசன், 52; ராணுவத்தில் வேலை பார்க்கிறார். மனைவி பிரகேஷ்வரி, 46; குழந்தைகள் சஞ்சய் குமார், 7, சுஷ்மிதா.
சஞ்சய் குமார், அறிவொளி நகரில் உள்ள தனியார் பள்ளியில், 2ம்வகுப்பு படித்துவந்தார். நேற்று மாலை, இவர் விளையாடிக் கொண்டிருந்த போது, அருகிலுள்ள, 25 அடி ஆழ பொது கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், அக்கம் பக்கத்தினரிடம் கூறியதைத் தொடர்ந்து, பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தண்ணீரில் மூழ்கி இருந்த சஞ்சய் குமாரை மீட்டனர். டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித் தனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.