/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கள்ளிப்புறா வளர்ப்பு ரூ.20 ஆயிரம் அபராதம் கள்ளிப்புறா வளர்ப்பு ரூ.20 ஆயிரம் அபராதம்
கள்ளிப்புறா வளர்ப்பு ரூ.20 ஆயிரம் அபராதம்
கள்ளிப்புறா வளர்ப்பு ரூ.20 ஆயிரம் அபராதம்
கள்ளிப்புறா வளர்ப்பு ரூ.20 ஆயிரம் அபராதம்
ADDED : ஜூன் 20, 2024 05:12 AM
திருப்பூர், : திருப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பல்லடம், ராயர்பாளையத்தில் ஜே.கே., அம்யூஸ்மென்ட் என்ற நிறுவனம், செல்லப் பிராணிகள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி நடத்தி வருகிறது.
அந்நிறுவனத்தில், நேற்று காலை திருப்பூர் வனச்சரக அலுவலர் தலைமையில் வன உயிரினங்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை செய்தனர். அதில், 'யுரேஷியன் காலர் டவ்' என்ற கள்ளிப்புறா பூண்டில் அடைத்து பார்வைக்கு வைத்திருந்ததை கண்டறிந்து அப்பறவையை மீட்டனர். அப்பறவை பாதுகாக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட உயிரினம் என்பதால் பறவையை கைப்பற்றி நிறுவன உரிமையாளர் ஷாஜகான் மீது வழக்கு பதியப்பட்டு, 20 ஆயிரம் ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது.
அட்டவணைப்படுத்தப்பட்ட வன உயிரினங்களை, பொதுமக்கள் வீட்டிலோ, விற்பனை நிலையங்களிலோ வளர்க்கவோ அல்லது பிடித்து விற்பனை செய்ய முயல்வது கூடாது என, வனத்துறையினர் தெரிவித்தனர்.