/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எவ்ளோ 'பேஷா' தயாரிக்கிறாங்க 'சமோசா' எவ்ளோ 'பேஷா' தயாரிக்கிறாங்க 'சமோசா'
எவ்ளோ 'பேஷா' தயாரிக்கிறாங்க 'சமோசா'
எவ்ளோ 'பேஷா' தயாரிக்கிறாங்க 'சமோசா'
எவ்ளோ 'பேஷா' தயாரிக்கிறாங்க 'சமோசா'
ADDED : ஜூன் 20, 2024 05:13 AM

திருப்பூர், : சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரித்த நான்கு கடைகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வில் சிக்கின.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, பாலமுருகன் அடங்கிய குழுவினர், சமோசா தயாரிப்பு நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தென்னம்பாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் சுற்றுப்பகுதிகளில் நடத்திய ஆய்வில், சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரித்த 4 கடைகளுக்கு, தலா ஆயிரம் ரூபாய் வீதம், 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; நோட்டீஸ் வழங்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
சமோசா தயாரிப்பாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் உரிமம், பதிவுச் சான்று உடனடியாக பெறவேண்டும். சமோசா தயாரிப்புக்கு, கெட்டுப்போன வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு காய்கறிகளை பயன்படுத்தக் கூடாது. சுத்தமான இடத்தில், தரைதளத்திலிருந்து அரை அடி உயரமாக, சுத்த மான விரிப்பில் வைத்து தயாரிக்கவேண்டும்.
சமோசா தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள், தன் சுத்தம் கடைபிடிக்கவேண்டும். நகங்களை வெட்டி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கவேண்டும். கையுறை, தலைகவசம் அணியவேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவேண்டும்
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மக்கள், உணவின் தரம்சார்ந்த புகார்களை, 94440 42322 வாட்ஸ் அப் எண் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு புகார் செயலியில் புகார்களை பதிவு செய்யலாம், என்றார்.