/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரி விதிப்பால் கட்டுக்குள் வந்த துணி இறக்குமதி வரி விதிப்பால் கட்டுக்குள் வந்த துணி இறக்குமதி
வரி விதிப்பால் கட்டுக்குள் வந்த துணி இறக்குமதி
வரி விதிப்பால் கட்டுக்குள் வந்த துணி இறக்குமதி
வரி விதிப்பால் கட்டுக்குள் வந்த துணி இறக்குமதி
ADDED : ஜூன் 24, 2024 01:29 AM
திருப்பூர்;புதிய இறக்குமதி வரி விதிப்பின் காரணமாக, சீனாவின் நிட்டிங் துணிகள் இறக்குமதி குறைந்துள்ளதால், ஜவுளித்தொழில் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
உள்நாட்டு சந்தை தேக்க நிலையில் இருப்பதால், செயற்கைப் பஞ்சு கலந்த, சாயமேற்றிய பின்னல் (நிட்டிங்) துணிகளை, பல்வேறு நாடுகளுக்கு, சீனா குறைந்த விலைக்கு ஏற்று மதி செய்து வருகிறது.
கடந்த நிதியாண்டில், நம் நாட்டின் வடமாநிலங்களில் இருக்கும் வர்த்தகர்கள், இவ்வகை துணிகளை இறக்குமதி செய்து, லுாதியானா, திருப்பூர் போன்ற ஆயத்த ஆடை தயாரிக்கும் இடங்களுக்கு விற்றனர். குறைந்த விலையிலான, சரியான குறியீட்டு எண் இல்லாத துணிகள், நம் நாட்டில் குவிக்கப்பட்டன.
கடந்த நிதியாண்டில் மட்டும், அதிகம் பயன்படுத்தப்படும் ஆறு குறியீட்டு எண்கள் (எச்.எஸ்., கோடு) மூலம், 5,200 கோடி ரூபாய் அளவுக்கு நிட்டிங் துணிகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது; குறிப்பாக, திருப்பூருக்கு அதிகம் வந்துள்ளன.
மத்திய அரசிடம் முறையீடு
உள்நாட்டு ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டதால், சங்கங்கள் கூட் டாக இணைந்து, மத்திய அரசிடம் முறையிட்டன. இவ்வகை இறக்குமதியால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, கடந்த பிப்., மாதம் துணி கிலோவுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை புதிய வரி விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த மூன்று மாதங்களாக, சாயமேற்றிய நிட்டிங் துணி இறக்குமதி குறைந்துவிட்டது.
நுாற்பாலைகள், நிட்டிங் மற்றும் சாய ஆலைகள் அதிக முதலீடு செய்து இயங்கி வருகின்றன. உற்பத்தி விவரம் இல்லாத சாயமேற்றிய கலப்புதுணி இறக்குமதியால், நம் நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 4,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டது.
புதிய வரி விதிக்கப்பட்ட பிறகு, மார்ச் மாதத்தில் இருந்து இறக்குமதி குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் மாதாந்திர சராசரி இறக்குமதியை காட்டிலும், இந்தாண்டு ஏப்., மாத இறக்குமதி 35 சதவீதம் குறைந்துள்ளது.
நமது பகுதிக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட சாயமேற்றிய செயற்கை பஞ்சு கலந்த பின்னல் துணிகள் இறக்குமதி, ஏப்., மாதத்தில் மட்டும், 73 சதவீதம் குறைந்துள்ளது. மாதம், 190 கோடி ரூபாயாக இருந்த இவ்வகை துணி இறக்குமதி, 50 கோடி ரூபாயாக குறைந்துள்ளது; இது, மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் நம் பகுதியில் உள்ள நிட்டிங் நுால் தயாரிக்கும் மில்கள் மற்றும் சாய ஆலைகள் பயன் பெறும்.
நமது தொழில்துறையும், தற்போது செயற்கை பஞ்சு கலந்த துணிகள் உள்ளிட்ட அனைத்து வகை துணிகளை தயாரிக்க தொடர் முதலீடு செய்து வருகிறது. வரும் காலங்களில், உள்நாட்டு தேவைக்கு மட்டுமல்லாது, ஏற்றுமதி செய்யவும், தமிழக ஜவுளித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
- பிரபு தாமோதரன், கன்வீனர், 'இந்தியன்
டெக்ஸ்பிரனர்ஸ்' கூட்டமைப்பு