/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுமைப்பணி தொழிலாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? சுமைப்பணி தொழிலாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
சுமைப்பணி தொழிலாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
சுமைப்பணி தொழிலாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
சுமைப்பணி தொழிலாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
ADDED : ஜூன் 24, 2024 01:29 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம், மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் ரங்கராஜ் மாநாட்டை துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் உண்ணிகிருஷ்ணன், ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். வரவு - செலவு அறிக்கையை, பொருளாளர் ஜெயராம் தாக்கல் செய்தார். மாவட்ட தலைவராக ராஜகோபால், செயலாளராக பாலன், பொருளாளராக ஜெயபால் உள்ளிட்டோர் தேர்வாயினர்.
சமூக பாதுகாப்பு சட்டத்தில், சுமைப்பணி தொழிலாளருக்கு பாதுகாப்பு வழங்குதல், ரோட்டோரம் ஓய்வுப்பந்தல் அமைக்க அனுமதித்தல், பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தருதல், நலவாரிய பணப்பயன்களை அதிகப்படுத்தி வழங்குவதுடன், உறுப்பினர் சேர்க்கையை எளிதாக்க வேண்டும். கூட்செட், உணவுக்கழக குடோன்', மார்க்கெட், டாஸ்மாக் குடோன்களில் அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.