Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கேட்பாரற்று உபகரணங்கள்; மாற்றுத்திறனாளிகள் ஏக்கம்

கேட்பாரற்று உபகரணங்கள்; மாற்றுத்திறனாளிகள் ஏக்கம்

கேட்பாரற்று உபகரணங்கள்; மாற்றுத்திறனாளிகள் ஏக்கம்

கேட்பாரற்று உபகரணங்கள்; மாற்றுத்திறனாளிகள் ஏக்கம்

ADDED : ஜூன் 18, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, உரிய காலத்தில் வீல் சேர், பேட்டரி வீல் சேர், கண் கண்ணாடி, ஊன்றுகோல், செயற்கை அவயங்கள், இணைப்புசக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், தையல் மெஷின் உள்ளிட்ட உதவி உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக, 40க்கும் மேற்பட்ட வீல் சேர் மற்றும் பேட்டரி வீல் சேர்கள், தேர்தலுக்கு ஓரிரு மாதம் முன்னரே அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தன.

அவற்றை, பயனாளிகளுக்கு வழங்காமல், மாதக்கணக்கில், கலெக்டர் அலுவலக தரைதளத்தில், மாடிப்படிக்கட்டு மறைவில்போட்டு வைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கான 20 தையல் மெஷின்களை, அறையினுள் பூட்டிவைத்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டு இன்றோடு 12 நாட்களாகியும்கூட, மாதக்கணக்கில் இருப்புவைத்துள்ள உபகரணங்களை, பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்கிற அக்கறை இல்லாதது மாற்றுத்திறனாளிகளை வேதனை அடையச் செய்கிறது. விண்ணப்பித்து பலமாத மாகியும், கண்முன்னே உபகரணம் இருந்தும் கூட, அவற்றை பயன்படுத்த முடியாதது மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

உபகரணங்களை உரிய பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கவேண்டும். நடப்பு நிதியாண்டுக்கான பயனாளிகள் தேர்வு முகாம்களை நடத்தி, தேவைப்படும் உபகரணங்களை அரசிடமிருந்து உரிய காலத்தில் பெற்றுத்தரவேண்டும். கலெக்டர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us