/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசியில் நாளை கலெக்டர் முகாம் குறைகளை கொட்டித்தீர்க்க மக்கள் காத்திருப்பு அவிநாசியில் நாளை கலெக்டர் முகாம் குறைகளை கொட்டித்தீர்க்க மக்கள் காத்திருப்பு
அவிநாசியில் நாளை கலெக்டர் முகாம் குறைகளை கொட்டித்தீர்க்க மக்கள் காத்திருப்பு
அவிநாசியில் நாளை கலெக்டர் முகாம் குறைகளை கொட்டித்தீர்க்க மக்கள் காத்திருப்பு
அவிநாசியில் நாளை கலெக்டர் முகாம் குறைகளை கொட்டித்தீர்க்க மக்கள் காத்திருப்பு
ADDED : ஜூன் 18, 2024 12:22 AM
திருப்பூர்:'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின்கீழ், ஒவ்வொரு கலெக்டரும், மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமை, தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு தாலுகாவில் நாள் முழுவதும் தங்கி அரசு அலுவலகங்களில் கள ஆய்வு செய்ய வேண்டும்; மக்களைச் சந்தித்து குறைகளை நேரடியாக கேட்டு, தீர்வுகாணவேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த ஜனவரி மாதம், கலெக்டர் கிறிஸ்துராஜ், உடுமலை தாலுகாவிலும், பிப்ரவரி மாதம், தாராபுரம் தாலுகாவிலும் தங்கினார்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்ததையடுத்து மீண்டும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கலெக்டர் கிறிஸ்துராஜ், நாளை (19ம் தேதி), அவிநாசி தாலுகாவில் தங்குகிறார்.
காலை, 9:00 முதல் மதியம், 10:30 மணி வரை,இ-சேவை, ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை, அங்கன்வாடி, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்கிறார்.
மதியம், 2:30 முதல் மாலை, 4:00 மணி வரை, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட அளவிலான அலுவலர்களின் கள ஆய்வு கருத்துக்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்; மாலை, 4:30 முதல் 6:00 மணி வரை, அவிநாசி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகிறார்.
மாலை, 6:00 மணிக்கு, பூங்காக்கள், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்கிறார். இரவில் தங்கியிருந்து, நாளை மறுநாள் (20ம் தேதி), காலை, 6:00 முதல் 8:00 மணி வரை, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், குடிநீர் வழங்கல், பொது போக்குவரத்து, பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்கிறார்.
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை சேர்ப்பது, குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதி, பஸ் வசதி உள்பட நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகளை கொட்டித்தீர்க்க அவிநாசி பகுதி மக்கள் தயாராக உள்ளனர்.