/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தனக்குத்தானே மின்சாரம் செலுத்தி தற்கொலை தனக்குத்தானே மின்சாரம் செலுத்தி தற்கொலை
தனக்குத்தானே மின்சாரம் செலுத்தி தற்கொலை
தனக்குத்தானே மின்சாரம் செலுத்தி தற்கொலை
தனக்குத்தானே மின்சாரம் செலுத்தி தற்கொலை
ADDED : ஜூன் 20, 2024 05:07 AM

அவிநாசி : அவிநாசியில் தனக்குத்தானே மின்சாரத்தை செலுத்தி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில் உள்ள சோலை நகர் அடுக்குமாடி குடியிருப்பில், 9ம் எண் பிளாக், 258ம் நம்பர் வீட்டில் வசித்தவர் நாகேந்திரன், 45. இவரது மனைவி பத்மாவதி. தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நாகேந்திரன் மரத்தச்சு வேலைக்கு சென்று வந்துள்ளார். சில ஆண்டுகள் முன், திடீரென நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார்.மன விரக்தியில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின் வயரை கைகளில் சுற்றி தனக்குத்தானே மின்சாரத்தை செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.