/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'உங்களை தேடி - உங்கள் ஊரில்' மனுக்கள் அளிக்க மக்கள் ஆர்வம் 'உங்களை தேடி - உங்கள் ஊரில்' மனுக்கள் அளிக்க மக்கள் ஆர்வம்
'உங்களை தேடி - உங்கள் ஊரில்' மனுக்கள் அளிக்க மக்கள் ஆர்வம்
'உங்களை தேடி - உங்கள் ஊரில்' மனுக்கள் அளிக்க மக்கள் ஆர்வம்
'உங்களை தேடி - உங்கள் ஊரில்' மனுக்கள் அளிக்க மக்கள் ஆர்வம்
ADDED : ஜூன் 20, 2024 05:06 AM

அவிநாசி : 'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்' திட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சப் கலெக்டர் சவுமியா உள்ளிட்டோர் அவிநாசி ஒன்றியத்தில் பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்த கலெக்டர், மாணவர்களுடன் உணவு அருந்தினார்.
திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு அவிநாசி ஒன்றிய கிராம பகுதிகளிலும் மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் கட்டடத்தின் கட்டுமான பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
சங்கமாங்குளம் வீதியில் பொதுநிதியில் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் பணிகள் மற்றும் நீலகிரி லோக்சபா எம்.பி.,நிதியில் கட்டப்பட்டு வரும் ரேசன் கடைகளை ஆய்வு செய்தார். அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மீது ஆய்வு கூட்டம் நடந்தது.
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அதில் அரசின் திட்டங்கள் குறித்தும் பொது மக்களிடம் இருந்து பெற்ற கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.