/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காதலை கைவிட மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு; 5 பேர் கைது காதலை கைவிட மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு; 5 பேர் கைது
காதலை கைவிட மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு; 5 பேர் கைது
காதலை கைவிட மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு; 5 பேர் கைது
காதலை கைவிட மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு; 5 பேர் கைது
ADDED : ஜூன் 20, 2024 05:07 AM
திருப்பூர் : திருப்பூர், பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ், 23. அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இதற்கு பெண் வீட்டு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. மீண்டும், அப்பெண்ணிடம் வாலிபர் பேச முயன்றார். இதுகுறித்து அப்பெண் தனது அண்ணனிடம் கூறினார்.
கடந்த, 17ம் தேதி பக்ரீத் பண்டிகைக்கு வெளியூர் செல்ல கிளம்பி கொண்டிருந்த அப்துல் அஜீசை தொடர்பு கொண்ட அப்பெண்ணின் அண்ணன் அப்துல் ரகுமான், 22, தங்கையுடனான காதல் விவகாரம் குறித்து பேச அழைத்தார். நொய்யல் ஆறு அருகே உள்ள மின் மயானம் பகுதிக்கு சென்ற அப்துல் அஜீஸிடம், காதலை கைவிட வலியுறுத்திய போது தகராறு ஏற்பட்டது. அப்துல் ரகுமான் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அப்துல் அஜீஸை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்துல் ரகுமான், 22, காஜா பக்ரூதீன், 20, அபிப்ரகுமான், 23, அபீபரா அகமது, 20, சுபாஷ், 23 என, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.