/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இயற்கை ஆர்வம் மேலோங்க பசுமை திருமணங்கள் இயற்கை ஆர்வம் மேலோங்க பசுமை திருமணங்கள்
இயற்கை ஆர்வம் மேலோங்க பசுமை திருமணங்கள்
இயற்கை ஆர்வம் மேலோங்க பசுமை திருமணங்கள்
இயற்கை ஆர்வம் மேலோங்க பசுமை திருமணங்கள்

குவியும் குப்பைகள்
சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் கூறியதாவது:
குறைவான பயன்பாடு
பசுமை திருமணங்களில், பாலிதீன் அறவே தவிர்க்கப்பட்டு, மக்கும் தன்மையுடைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு, வெளியேறும் பொருட்களை கூட தனியாக சேகரித்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அகற்ற தன்னார்வ அமைப்பினரை பணியில் ஈடுபடுத்துகின்றனர்; இது, வரவேற்கத்தக்கது.
வீணடிக்கப்படும் உணவு
பசுமை திருமணங்களின் முக்கிய நோக்கம், வளங்களை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்பதே. அதாவது, தேவைக்கு அதிகமாக உணவு பரிமாறி, அவை வீணடிக்கப்படுவதை தவிர்ப்பது; மிக அதிகளவு நபர்களை அழைத்து, பெரும் செலவு செய்வதை குறைப்பதும் கூட, வளங்களின் வரிசையில் வரும். உதாரணாக, இலையில் போடப்படும் உணவு அளவுக்கதிகமாகும் போது, அதை அப்படியே மூடி வைத்து, வீணடிக்கும் நிகழ்வை பல இடங்களில் பார்த்திருக்க முடியும். அவ்வாறு நாம் வீணடிக்கும் உணவு, அடுத்தவருக்குரியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; அடுத்தவருக்குரிய உணவை அபகரிப்பதற்கு, இது சமம்.