Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆடுகள் வேட்டை; தெரு நாய்கள் சேட்டை

ஆடுகள் வேட்டை; தெரு நாய்கள் சேட்டை

ஆடுகள் வேட்டை; தெரு நாய்கள் சேட்டை

ஆடுகள் வேட்டை; தெரு நாய்கள் சேட்டை

ADDED : ஜூன் 22, 2024 04:56 PM


Google News
Latest Tamil News
திருப்பூர் மாவட்டத்தில், நகர மற்றும் கிராமப்புறங்களில் தெரு நாய்கள், அதிகரித்து வருகின்றன. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு அனுமதி வழங்கியும், உள்ளாட்சி நிர்வாகங்களில் நிலவும் நிதிப்பற்றாக்குறை, தெரு நாய்களை பிடித்து வர ஆட்கள் கிடைக்காததது போன்ற பல பிரச்னைகளால், கருத்தடை பணி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. வெள்ளகோவில், காங்கயம் பகுதியில் தெரு நாய்களால், ஆடுகள் கொல்லப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன், வீரணம்பாளையம் கிராமம், பகவதிபாளையத்தில் வேலுசாமி என்பவரது விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளில், 3 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றன. சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, 3 மாதங்களில் மட்டும், 200க்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுள்ளன என, அங்குள்ள விவசாயிகள் குமுறுகின்றனர்.

காரணம் என்ன?

காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் சாலையோர அசைவ உணவகங்களில் இறைச்சி, இறைச்சிக் கழிவுகளை உண்கின்றன. அத்தகைய உணவு கிடைக்காத போது, கிராமப்புறங்களுக்கு வந்து ஆடுகளை, கூட்டமாக வேட்டையாடுகின்றன.

நாய்களின் கொடூர தாக்குதலில் பலியாகும் ஆடுகளில் பாதியைத் தின்று விட்டு, சென்று விடுகின்றன எனவும், அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

----

காங்கயம், வீராணம்பாளையத்தில் தெருநாய்களால் கொல்லப்பட்ட ஆடுகள்.

தெருநாய் கொடூர படம் வைக்கவும்

விவசாயிகள் கண்ணீர்

பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, கலெக்டருக்கு அனுப்பிய மனு:விளை பொருட்களுக்கு உரிய விலையில்லாததால், விவசாயிகள் பலர் ஆடு வளர்ப்பை பிரதானமாக கொண்டுள்ளனர். வறட்சியால் ஆடுகளுக்கு தீவனப்பற்றாக்குறையும் ஏற்படுகிறது. தவிடு வாங்கி, தீவனமாக வழங்க கூட பலருக்கும் பொருளாதார வசதி இல்லாத நிலையில், விலைக்கு பஞ்சு வாங்கி, ஆடுகளுக்கு தீவனமாக செலுத்துகின்றனர். ஆடுகள் அம்மை உள்ளிட்ட தொற்று வியாதிகளால் அவை இறப்பதும் உண்டு. இதுபோன்ற சூழலில், நாய்களால் ஆடுகள் கொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us