/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தண்ணீர் 'தரித்திர நிலை' உணர மறந்தோம் தண்ணீர் 'தரித்திர நிலை' உணர மறந்தோம்
தண்ணீர் 'தரித்திர நிலை' உணர மறந்தோம்
தண்ணீர் 'தரித்திர நிலை' உணர மறந்தோம்
தண்ணீர் 'தரித்திர நிலை' உணர மறந்தோம்

மூன்றில் ஒரு பங்கு
நீர்நிலை மாயம்
கடந்த, 30 ஆண்டுகளில், மூன்றில் ஒரு பங்கு நீர் நிலைகளை நாம் இழந்திருக்கிறோம். நீர்நிலைகளை அதிகம் இழந்த மாநிலங்களில், தமிழகம் 'நம்பர் ஒன்' என்றும் சொல்லலாம்.கடந்தாண்டு, முதன்முறையாக இந்தியாவில் உள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை ஒரு அமைப்பினர் நடத்தினர். அதில், நம் நாட்டில், 24 லட்சத்து ஆயிரத்து 24 ஆயிரத்து 540 நீர்நிலைகள் உள்ளன என, கணக்கிட்டுள்ளனர். இதில், தமிழகத்தில், ஒரு லட்சத்து ஏழு ஆயிரம் நீர்நிலைகள் உள்ளன; அதில், 52 ஆயிரம் நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லை.உலகளவில், அதிகளவு நிலத்தடி நீரை பயன்படுத்துகிற நாடாக, இந்தியா உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 30 பிர்காவில், ஒரு பிர்கா தவிர, மற்ற அனைத்து பிர்காவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது; தண்ணீர் தரித்திர நிலை என்கிறோம். மழையை நாம் சரியாக பயன்படுத்தவில்லை; மழைநீரை சேமிக்கவில்லை. தமிழகத்தில், 72 சதவீதம் நிலம், பாறைப்பகுதி; எனவே, அதில் விழுகிற தண்ணீர் ஓடிவிடும்.மக்கள் தங்கள் பகுதியில் ரோடு சரியில்லை; தெரு விளக்கு எரிவதில்லை என்றெல்லாம் கேட்கின்றனர். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை குறித்து பேசுவதில்லை; குழாய் வழியாக தண்ணீர் வருவதால், தண்ணீரின் அருமை அவர்களுக்கு தெரிவதில்லை.