Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பழைய தொகுப்பு வீடு பராமரிக்க நிதியுதவி

பழைய தொகுப்பு வீடு பராமரிக்க நிதியுதவி

பழைய தொகுப்பு வீடு பராமரிக்க நிதியுதவி

பழைய தொகுப்பு வீடு பராமரிக்க நிதியுதவி

ADDED : ஜூன் 10, 2024 02:06 AM


Google News
திருப்பூர்;மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவியுடன், தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம், 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளன. கடந்த காலங்களில் கட்டிய தொகுப்பு வீடுகள் பழுதான நிலையில் உள்ளன. தமிழக அரசு, கடந்த மார்ச் மாதம், பழுதான தொகுப்பு வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கியது. கடந்த, 2000-2001ல் கட்டிய வீடுகளை பராமரிக்க, அதிகபட்சமாக, சாய்வான கான்கிரீட் வீடுகளுக்கு, 1.50 லட்சம் ரூபாயும், ஓட்டு வீடுகளுக்கு, 70 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்பட உள்ளது.

வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் மற்றும் வாரிசுதாரர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும். நல்ல நிலையில் உள்ள வீடு, பழுதுபாரப்பு மானியம் பெற்ற வீடுகள், வாடகைக்கு விடப்பட்ட வீடுகளுக்கு, பராமரிப்பு மானியம் கிடைக்காது. ஊராட்சி அளவிலான தேர்வுக்குழு, தொகுப்பு வீடு பராமரிப்புக்கான பயனாளிகளை தேர்வு செய்யும்.

அதிகாரிகள் குழு, வீடுகளை ஆய்வு செய்து, சிறு பழுதான வீடுகள்; பெரிய பழுதான வீடுகள் என, இருவேறு வகையான வீடுகள் பட்டியல் தயாரிப்பார்கள்; அவற்றை, கிராமசபா கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்படும்.

சுவர்விரிசல், தரை சேதம், சீலிங் பூச்சு 'பேச்சஸ்', கதவு மற்றும் ஜன்னல் பழுது, சுவர் பூச்சு பராமரிப்பு, கழிப்பறை பழுதுநீக்கம், வெள்ளை அடித்தல் போன்றவை சிறுபழுது பணிகள்; ஓட்டு வீட்டுக்கு, 32 ஆயிரம் ரூபாயும், கான்கிரீட்வீட்டுக்கு, 55 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

ஓட்டுக்கட்டடத்தில் ஓடு மேற்கூரை பழுது, சாய்வான தொகுப்பு வீடுகளின் மேற்கூரை மாற்றுதல், தரை அமைத்தல், பெரிய விரிச்களை சரிசெய்வது, கதவு மற்றும் ஜன்னல் பழுதுநீக்கம், வெள்ளை அடித்தல் ஆகிய பணிகள் பெரும் பழுதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு, ஓட்டு வீட்டுக்கு, 70 ஆயிரம் ரூபாயும், கான்கிரீட் வீட்டுக்கு, 1.50 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்படும்.

ஆய்வுக்கு பின் பரிந்துரை

தொகுப்பு வீடுகள் பழுதுநீக்க உதவி பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் விண்ணப்பிக்க வேண்டும். பொறியாளர் குழு ஆய்வு செய்து, பயனாளிகளை பரிந்துரைக்கும். அதற்கு பிறகு, தேர்வு குழு தேர்வு செய்யும்.பணிகளை அதிகாரிகள் குழு கண்காணிக்கும், பராமரிப்பு பணி மற்றும் பணி நிறைவு என, இரு தவணையாக நிதி விடுவிக்கப்படும். தேவையான சிமென்ட், கம்பிகள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும். உண்மையான மதிப்பீடு அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகையில் எது குறைவோ, அந்த அளவுக்கு நிதி உதவி வழங்கப்படும்.- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us