ADDED : ஜூன் 10, 2024 02:05 AM
திருப்பூர்;காங்கயம், சிவன்மலை, ராமபட்டினத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவருக்கு சொந்தமான ஓ.இ., மில் உள்ளது. இந்த மில்லின் ஒரு பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து சென்ற காங்கயம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மில்லில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நுால், பஞ்சு என, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.