/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூர் தொகுதி வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் நிறைவேற்ற உறுதி திருப்பூர் தொகுதி வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் நிறைவேற்ற உறுதி
திருப்பூர் தொகுதி வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் நிறைவேற்ற உறுதி
திருப்பூர் தொகுதி வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் நிறைவேற்ற உறுதி
திருப்பூர் தொகுதி வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் நிறைவேற்ற உறுதி
ADDED : ஜூன் 10, 2024 02:04 AM
திருப்பூர்;பிரதமராக மோடி நேற்று மீண்டும் பதவியேற்றார். திருப்பூர் தொகுதி வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று பாரதிய ஜனதா உறுதியளித்துள்ளது.
பிரதமராக மோடி நேற்று மீண்டும் பதவியேற் றார். திருப்பூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தத்துக்கு வெற்றி கைகூடவில்லை. இருப்பினும், ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.,வினர் பெருமிதப்படுகின்றனர். மத்தியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
பா.ஜ., மாநில பொதுசெயலாளர் முருகானந்தம் கூறியதாவது:
திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு மக்கள் தங்களின் பெரும் ஆதரவை கொடுத்துள்ளனர். வெற்றி பெறாவிட்டாலும் கூட, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் பணியில் ஈடுபடுவேன். இதற்கு நான் முழுமையாக மக்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். மத்தியில், மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.
திருப்பூருக்கு தேவையான வளர்ச்சி திட்டங் களை பெற்று தர முனைப்பு காட்டுவேன். மக்கள் தங்கள் கோரிக்கைகளை பா.ஜ., மாவட்ட அலுவலகத்திலோ அல்லது என்னிடமோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.