ADDED : ஜூன் 10, 2024 02:06 AM
திருப்பூர்;திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள், 74. நேற்று மதியம் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார்.
வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர், மூதாட்டியின் கழுத்தை நெரித்து, அணிந்திருந்த, ஒன்பது சவரன் நகையோடு தப்பி சென்றார்.
நல்லுார் போலீசார் விரைந்துசென்று 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு விசாரித்தனர். நகை பறிப்பு நடந்த நேரத்தில், சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவரின் நடமாட்டம் இருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, பல்வேறு 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு, நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கோவில் வழி பஸ் ஸ்டாண்டில் வைத்து போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், மதுரையை சேர்ந்த கார்த்திக், 31; தற்போது திருப்பூர் கோவில் வழியில் தங்கி, நிட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மூதாட்டி வீட்டு அருகே நண்பனை பார்க்க, மதுபோதையில் சென்றார். வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்து, நகையை பறித்து தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நகையை மீட்டனர்.
நகை பறிப்பு நடந்து, இரண்டு மணி நேரத்தில், சம்பந்தப்பட்ட நபரை விரைந்து போலீசார் கைது செய்தனர்.