/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஈக்கள் படையெடுப்பு கோழிப்பண்ணை முற்றுகை ஈக்கள் படையெடுப்பு கோழிப்பண்ணை முற்றுகை
ஈக்கள் படையெடுப்பு கோழிப்பண்ணை முற்றுகை
ஈக்கள் படையெடுப்பு கோழிப்பண்ணை முற்றுகை
ஈக்கள் படையெடுப்பு கோழிப்பண்ணை முற்றுகை
ADDED : ஜூன் 26, 2024 01:31 AM
திருப்பூர்;குண்டடம் அருகே கொக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த, 10 ஆண்டாக முட்டை உற்பத்தி செய்யும் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. சில மாதங்களாக இப்பண்ணையிலிருந்து வெளியேறும் ஈக்கள் மிக அதிகளவில் சுற்றுப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஏறத்தாழ 2 கி.மீ., துாரம் வரையுள்ள பகுதிகளான, மாரப்பாளையம், தர்மர்புதுார் மற்றும் கொக்கம்பாளையம் கிராமங்களில், அதிகளவில் ஈக்கள் படைெயடுத்து வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
வீடுகளில், உணவு பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்ட பொருட்களில் இவை கூட்டம் கூட்டமாக சேர்ந்து பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும், அருவெறுப்பும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் நேற்று காலை கோழிப்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற குண்டடம் போலீசார், சுகாதாரத்துறையினர், கோழிப்பண்ணை நிர்வாகத்துடன் பேச்சு நடத்தினர். 20 நாளுக்குள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என நிர்வாகத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.