/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கள்ளச்சாராய உயிரிழப்பு; தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராய உயிரிழப்பு; தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய உயிரிழப்பு; தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய உயிரிழப்பு; தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய உயிரிழப்பு; தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2024 01:34 AM

திருப்பூர்;கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில், தமிழக அரசைக் கண்டித்து, திருப்பூரில் தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயம் அருந்திய, 60 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அமைப்புகள் இதனை கண்டித்து வருகின்றன.
இச்சூழலில், கள்ளக்குறிச்சி விஷயத்தில், தமிழக அரசின் செயல்பாடுகளைக் சுண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பில் நேற்று ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் குழந்தைவேல், பிரசாத்குமார், ஆறுச்சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
வக்கீல் அணி மாநில துணை செயலாளர் பாக்யா செல்வராஜ் தலைமை வகித்தார். இளைஞர்அணி, மகளிர் அணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.