ADDED : ஜூன் 03, 2024 12:59 AM
புயலின் தாக்கம், அதி கனமழை குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றதால், தமிழக கடலோர மாவட்டங்கள், கேரளாவின் அனேக இடங்களில் இருந்து, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று மீன் வரத்து உயர்ந்தது. கடந்த இரு வாரங்களாக முகூர்த்தம் என்பதால், சரிந்திருந்த மீன் விற்பனை நேற்று அதிகரித்தது. வஞ்சிரம், கிலோ 650, பாறை, 180, படையப்பா, 360, கட்லா, 150, மத்தி, 150, ரோகு, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வரத்து அதிகமாகி விலை குறைந்திருந்த நிலையில், விற்பனை சுறுசுறுப்பானதால், மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
'கடந்த ஒரு மாதத்தில் நேற்றுதான் குறிப்பிட்டு சொல்லும்படி விற்பனை நடந்துள்ளது. 60 டன் குவிந்ததால், மீன் விலை குறைந்தது. மீன் விலை குறைவு என்பதால், பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கிச் சென்றனர்,' என, மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.