ADDED : ஜூன் 03, 2024 12:59 AM
சிகரங்கள் அறக்கட்டளையின், 80வது ரத்த தான முகாம் திருப்பூர், கே.செட்டிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்து, ரத்தக் கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அறக்கட்டளை தலைவர் காமராஜ், துணை தலைவர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில், 42 யூனிட் ரத்தம் மக்களிடம் சேகரிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரிக்கு வழங்கப்பட்டது. திருப்பூர் ஐ பவுண்டேஷ னுடன் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில், 84 பேர் பங்கேற்று, இலவச பரிசோதனை மேற்கொண்டனர். 14 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
திருப்பூர் ரேவதி மருத்துவமனை மூலம், 67 பேருக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் இருதய பரிசோதனை மற்றும் 27 பேர் பல் பரிசோதனை மேற்கொண்டனர்.