/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மீன் விலை உயர்ந்தும் விற்பனை 'துாள்' மீன் விலை உயர்ந்தும் விற்பனை 'துாள்'
மீன் விலை உயர்ந்தும் விற்பனை 'துாள்'
மீன் விலை உயர்ந்தும் விற்பனை 'துாள்'
மீன் விலை உயர்ந்தும் விற்பனை 'துாள்'
ADDED : ஜூன் 17, 2024 12:07 AM
திருப்பூர்;தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில், மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று,திருப்பூர், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு அதிகளவில் மீன்கள் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வழக்கத்கத்தை விட குறைவாக, 55 டன் மீன்களே வந்திருந்தது. இதனால், வஞ்சிரம், மத்தி, கடல்பாறை, படையப்பா, விளா உள்ளிட்ட மீன்கள் விலை, 30 முதல், 70 ரூபாய் வரை விலை உயர்ந்தது.இருப்பினும், மீன் விற்பனை நேற்று அதிகரித்தது.
மீன் வியாபாரிகள் கூறுகையில், 'மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் முழுமையாக கரைக்கு திரும்பும் போது மீன் வரத்து அதிகரிக்கும். தற்போதைக்கு கேரள, ஆந்திரா மீன்கள் வரத்தால், குறைந்தளவு மீன்களே வந்துள்ளதால், மீன் விலை சற்று உயர்வாக இருந்தது.
புதன் கிழமைக்கு பின் விலைகள் குறைந்து விடும். அடுத்த வாரம், 80 டன் மீன் எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.