/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் தேர்வு மைய அலுவலருக்கு பயிற்சி கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் தேர்வு மைய அலுவலருக்கு பயிற்சி
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் தேர்வு மைய அலுவலருக்கு பயிற்சி
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் தேர்வு மைய அலுவலருக்கு பயிற்சி
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் தேர்வு மைய அலுவலருக்கு பயிற்சி
ADDED : ஜூன் 17, 2024 12:05 AM

திருப்பூர்;நாளை நடைபெறவுள்ள, யூ.ஜி.சி., நெட் தேர்வில், தேர்வு மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பல்கலை மற்றும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர்கள் சேர்க்கைக்கு அடித்தளமான யூ.ஜி.சி., நெட் தேர்வு, 'ஆப்லைன்' முறையில், நாளை நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வுக்கான மையமாக, கே.எம்.சி., பப்ளிக் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி நடைபெறும் இத்தேர்வினை இம்மையத்தில் காலை 533 பேர், மதியம், 376 பேர் என மொத்தம், 909 பேர் எழுதுகின்றனர்.
தேசிய தேர்வு முகமையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக, இப்பள்ளியின் தலைமை முதல்வர் மனோகரன் உள்ளார். தேர்வு மையத்தில் பணியாற்றும் மைய ஒருங்கிணைப்பாளர், உற்று நோக்காய்வாளர், அறைக்கண்காணிப் பாளர்களுக்கு தேர்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படும் முறை உள்ளிட்ட விதிகள் குறித்து இப்பயிற்சியில் விளக்கப்பட்டது.