/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விரல் துண்டான பெண்ணுக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை விரல் துண்டான பெண்ணுக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
விரல் துண்டான பெண்ணுக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
விரல் துண்டான பெண்ணுக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
விரல் துண்டான பெண்ணுக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
ADDED : மார் 14, 2025 12:40 AM
திருப்பூர் : பொங்கலுாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், மீனா, 30 என்பவர் பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்தார்.
கடந்த 2024, ஜூலை, 4ம் தேதி, இயந்திரத்தை சுத்தம் செய்தபோது, அவரது விரல் துண்டானது. பணியின்போது ஏற்பட்ட விபத்தாக கருதப்பட்டு, இ.எஸ்.ஐ., திட்டத்தில் மாத ஓய்வூதியம், 1,463 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கே.என்.பி., புரம் இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிளை மேலாளர் இந்திரலோகா, நிரந்தர ஊனம் ஓய்வூதிய ஆணை மற்றும் 9,267 ரூபாய்க்கான காசோலையை மீனா மற்றும் குடும்பத்தினரிடம் வழங்கினார்.