/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ படிக்கட்டு விபத்துகளை தடுக்க அரசு டவுன் பஸ்களிலும் கதவு படிக்கட்டு விபத்துகளை தடுக்க அரசு டவுன் பஸ்களிலும் கதவு
படிக்கட்டு விபத்துகளை தடுக்க அரசு டவுன் பஸ்களிலும் கதவு
படிக்கட்டு விபத்துகளை தடுக்க அரசு டவுன் பஸ்களிலும் கதவு
படிக்கட்டு விபத்துகளை தடுக்க அரசு டவுன் பஸ்களிலும் கதவு
ADDED : மார் 14, 2025 12:40 AM

திருப்பூர் : பஸ் படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்குவோர் உயிரிழக்கும் நிலை ஏற்படுவதால், அதனை தவிர்க்க, அனைத்து டவுன் பஸ்களிலும் கதவு பொருத்தும் பணி துவங்கியுள்ளது.
அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது சாலை பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது. இது குறித்து பலமுறை அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், 'பீக் ஹவர்ஸ்' தரு ணத்தில், பஸ்களில் படிக்கட்டு பயணம் தொடர்கிறது.
இந்நிலையில், அரசு டவுன் பஸ்களில் கதவுகள் பொருத்தும் பணி அனைத்து கோட்டங்களிலும் துவங்கியுள்ளது. கோவை, ஈரோடு கோட்டங்களில், 121 பஸ்களுக்கு கடந்த இரு வாரங்களில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து கழக பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பஸ் ஸ்டாப்பில் பஸ் நிறுத்தும் போது கதவு திறக்க வேண்டும். பயணிகள் இறங்கி, ஏறியவுடன், கதவு மூட வேண்டும். கதவு பொருத்துவதை விட அவற்றின் செயல்பாட்டை முழுமையாக இயக்கி பார்த்து விட்டு பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் அனைத்து டவுன் பஸ்களிலும் கதவுகள் பொருத்தப்பட்டு விடும். கதவு மூடியபடி பஸ்களை இயக்கும் போது, பஸ்சில் இருந்து பயணிகள் தவறி விழும் சம்பவம் தடுக்கப்படும், விபத்து, பலி குறையும் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.