தொகுதி பறிபோனது
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது நடந்த, 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது; திருப்பூரில் எதிர்பாராத தோல்வியடைந்தது. தொகுதியை, இந்திய கம்யூ., கைப்பற்றியது. அடுத்து வந்த 2021 சட்டசபை தேர்தலும், தாராபுரம், காங்கயம், திருப்பூர் தெற்கு தொகுதிகளில் தோல்வியடைந்தது.
ஒதுங்கிய 'மாஜி'க்கள்
லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே, வேட்பாளராக விருப்பமின்றி பலரும் ஒதுங்கினர். 'மாஜி'க்கள் ஒதுங்கியதால், புதிய வேட்பாளரை கண்டறிய கட்சி முடிவு செய்தது.
நான்காவது தோல்வி
திருப்பூர் அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இது, நான்காவது தோல்வி. கடந்த, 2019 லோக்சபா, 2021 சட்டசபை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை தொடர்ந்து, 2024 லோக்சபா தேர்தலும் தோல்வியை தழுவியுள்ளது, பேரதிர்ச்சியாக மாறியிருக்கிறது. நிர்வாகிகள் மட்டுமல்ல, இத்தேர்தல் முடிவு ஒவ்வொரு தொண்டர்களையும் சோர்வடைய செய்துள்ளது.