Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒரு மாவட்டத்துக்குள் 5 எம்.பி.,க்கள் கைகோர்த்தால் தொகுதிகள் வளம் பெறும்

ஒரு மாவட்டத்துக்குள் 5 எம்.பி.,க்கள் கைகோர்த்தால் தொகுதிகள் வளம் பெறும்

ஒரு மாவட்டத்துக்குள் 5 எம்.பி.,க்கள் கைகோர்த்தால் தொகுதிகள் வளம் பெறும்

ஒரு மாவட்டத்துக்குள் 5 எம்.பி.,க்கள் கைகோர்த்தால் தொகுதிகள் வளம் பெறும்

ADDED : ஜூன் 05, 2024 12:31 AM


Google News
திருப்பூர்;கோவை மாவட்டத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த திருப்பூர், கடந்த, 2008ல், தனி மாவட்டமானது. லோக் சபா தொகுதிக்கான சட்ட சபை தொகுதி பிரிக்கப்பட்ட போது, மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள், 5 எம்.பி.,க்களை தேர்வு செய்யும் நிலை உருவானது.

l திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகள், திருப்பூர் லோக்சபா தொகுதிக்குள் உள்ளன. தொகுதி எம்.பி.,யாக சுப்பராயன், இரண்டாவது முறை வெற்றிபெற்றிருக்கிறார்.

l திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதி, கோவை லோக்சபா தொகுதியில் இணைந்திருக்கிறது; இத்தொகுதி எம்.பி.,யாக தி.மு.க.,வின் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றிருக்கிறார்.

l காங்கயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகள், ஈரோடு லோக்சபா தொகுதிக்குள் உள்ளன; இத்தொகுதி எம்.பி.,யாக பிரகாஷ்(தி.மு.க.,) வெற்றிபெற்றிருக்கிறார்.

l அவிநாசி சட்டமன்ற தொகுதி, நீலகிரி லோக்சபா தொகுதிக்குள் வருகிறது; இத்தொகுதிஎம்.பி.,யாக தி.மு.க., வின் ராஜா, வெற்றி பெற்றிருக் கிறார்.

l திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிகள், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குள் வருகின்றன; இத்தொகுதி எம்.பி.,யாக ஈஸ்வரசாமி (தி.மு.க.,) வெற்றி பெற்றிருக்கிறார்.

எல்லை பெரிதுஅதன்படி, திருப்பூர் மாவட்ட மக்கள் திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி, கோவை என, 5 எம்.பி.,க்களுக்கு ஓட்டளித்துள்ளனர். தொகுதி பிரச்னை தொடர்பாக திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோவை என, நான்கு கலெக்டர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன், எம்.பி.,க்கள் தொடர்பில் இருக்க வேண்டியிருக்கிறது.

தொழில் சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கான தீர்வு தொடர்பாக, அந்தந்த தொகுதி எம்.பி.,க்களை மக்கள் தொடர்பு கொள்கின்றனர்.

வழக்கமாக ஒவ்வொரு எம்.பி.,க்களும் தனித்து செயல்படுவதால், பல பிரச்னைகளுக்கு தீர்வு இல்லாமலே போய்விடுகிறது; அல்லது இழுபறியாகிறது. இந்த முறையாவது இந்த நிலை மாற வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்களும் இணைய வேண்டும்

மாவட்ட பிரச்னை சார்ந்து, 8 எம்.எல்.ஏ.,க்களும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவதும் அவசி யமாகிறது. 'பொதுவான பிரச்னை சார்ந்து, மாவட்டத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஒருங்கிணைய வேண்டும்' என்பதே, திருப்பூர் தொகுதி மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us