/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாதியில் வெளியேறிய பா.ஜ., வேட்பாளர் பாதியில் வெளியேறிய பா.ஜ., வேட்பாளர்
பாதியில் வெளியேறிய பா.ஜ., வேட்பாளர்
பாதியில் வெளியேறிய பா.ஜ., வேட்பாளர்
பாதியில் வெளியேறிய பா.ஜ., வேட்பாளர்
ADDED : ஜூன் 05, 2024 12:34 AM

திருப்பூர்;தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் எதிர்பார்த்த மாதிரி இல்லாத காரணமாக, பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் பாதியில் வெளியேறினார்.
லோக்சபா தேர்தல் திருப்பூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை திருப்பூர், பல்லடம் ரோடு எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரியில் நேற்று நடந்தது.
ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன்னே இந்திய கம்யூ., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சி வேட்பாளர் மையத்துக்கு வந்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் முன்னிலை பெறத் துவங்கினார். இரண்டு, மூன்று சுற்றுகள் வரை முடிவுகள் சாதகமாக வரக்கூடும் என நினைத்து காத்திருந்த வேட்பாளர் முருகானந்தத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால், காலை, 11:45 மணியளவில் பாதியிலேயே ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறி, காரில் ஏறி மாவட்ட அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்றதற்கு பின், மையத்தில் இருந்த பா.ஜ.,வினர்சற்று ஏமாற்றத்துடன் வெளியேறினர்.