/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சமையலர் வழக்கு: டி.எஸ்.பி., சாட்சியம் சமையலர் வழக்கு: டி.எஸ்.பி., சாட்சியம்
சமையலர் வழக்கு: டி.எஸ்.பி., சாட்சியம்
சமையலர் வழக்கு: டி.எஸ்.பி., சாட்சியம்
சமையலர் வழக்கு: டி.எஸ்.பி., சாட்சியம்
ADDED : ஜூன் 01, 2024 12:08 AM
திருப்பூர்;அவிநாசி சத்துணவு சமையலர் மீதான வன்கொடுமை வழக்கில், டி.எஸ்.பி., திருப்பூர் கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்.
அவிநாசி அருகேயுள்ள திருமலைக்கவுண்டம்பாளையத்தில் சத்துணவு சமையலர் பாப்பாள். கடந்த 2018 ம் ஆண்டில், சத்துணவு மையத்தில் அவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிடக் கூடாது என சிலர் தடுத்தனர். இதனால் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் தொடர் நிகழ்வுகளால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை திருப்பூர் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை வழக்கு விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மாதம் இதன் விசாரணை தொடர்ந்து நடந்தது. இதில் அரசு தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் அப்போதைய விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி., பரமசாமி நேற்று கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி பத்மா முன்னிலையில், அவரிடம் விசாரணை நடந்தது. அதன்பின், வழக்கு வரும், 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.