Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மருத்துவம் படிக்க உதவும் சாகர் அறக்கட்டளை

மருத்துவம் படிக்க உதவும் சாகர் அறக்கட்டளை

மருத்துவம் படிக்க உதவும் சாகர் அறக்கட்டளை

மருத்துவம் படிக்க உதவும் சாகர் அறக்கட்டளை

ADDED : ஜூன் 01, 2024 12:09 AM


Google News
திருப்பூர்;ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சாகர் இன்டர்நேர்ஷனல் பள்ளியின் ஒரு அங்கமான சாகர் அகாடமியில் படித்து, தற்போது மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

சாகர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்து பேசியதாவது:கடந்த, 3 ஆண்டில், 90க்கும் மேற்பட்ட மருத்துவம் படிக்கும் மாணவர்களை உருவாக்கியுள்ளோம். 'நீட்' மதிப்பெண் அடிப்படையில், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு கல்விக்கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

சாகர் அகாடமியில் பயின்று 'நீட்' தேர்வில், 600 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு, 1.5 லட்சம், 650 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு, 2 லட்சம், 680 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு முழு கல்வி கட்டணமும் சாகர் கல்வி அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

அகாடமி கல்வி இயக்குனர் சுரேந்திர ரெட்டி, பேசினார். முன்னதாக, பள்ளி முதல்வர் ஷீஜா வரவேற்றார். 60க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். சாகர் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us