/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலை உட்கட்டமைப்பில் மாற்றம் அவசர அவசியம்! சாலை உட்கட்டமைப்பில் மாற்றம் அவசர அவசியம்!
சாலை உட்கட்டமைப்பில் மாற்றம் அவசர அவசியம்!
சாலை உட்கட்டமைப்பில் மாற்றம் அவசர அவசியம்!
சாலை உட்கட்டமைப்பில் மாற்றம் அவசர அவசியம்!
ADDED : ஜூன் 12, 2024 01:53 AM

திருப்பூர்;'வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் வரிசையில் இணைந்து திருப்பூர் நகரம் மற்றும் நகரையொட்டியுள்ள சாலைகளில், தற்போதுள்ள கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான மாற்றம், பெரும் பயன் அளிக்கும்' என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் ஆறாவது பெரிய நகரமாக அடையாளம் காணும் அளவுக்கு திருப்பூர் வளர்ந்திருக்கிறது. நகரின் மையப்பகுதி மற்றும் சுற்றியுள்ள ஊரகப் பகுதிகளில், சாலை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும், மேம்படுத்துவதும் காலத்தின் அவசியமாக மாறியிருக்கிறது.
நகரவாசிகளே அதற்கான ஆக்கப்பூர்வ யோச னையையும் முன் வைத்துள்ளனர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் தாராபுரம், காமராஜர் சாலை சந்திக்கும் இடத்தில் மேம்பாலத்தின் கீழ் ரவுண்டானா அமைந்துள்ளது.
மேம்பாலத்தின் மேல் செல்ல வேண்டிய பெரும்பாலான வாகனங்கள், 'சர்வீஸ்' சாலையில் பயணிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தாராபுரம் சாலையில் இருந்தும், காமராஜர் சாலையில் இருந்தும்எம்.ஜி., புதுார் செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தின் மேற்கு பக்கம் தவறான திசையில், ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றன.
பல்லடம் சாலையில், டி.கே.டி., பங்க் பஸ் நிறுத்தம் முதல், பழைய பேருந்து நிலையம் வரை, சாலையின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கம், தவறான திசையில், அதிக வேகத்தில் டூவீலர்கள் பயணிக்கின்றன.
ரவுண்டானாவை சுற்றி அதிகளவில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. பிரேமா ஓட்டல் முதல், பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால், நெரிசல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், பெருமாள் கோவில் வரை, சாலையின் இருபுறமும், வாகனங்கள் தவறான திசையில் பயணித்து, விபத்துக்கு வழிவகை ஏற்படுத்துகின்றனர்.
இப்படி செய்யலாமே...
பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில், பாலத்தின் கீழ் உள்ள ரவுண்டானாவை அகற்றி விட்டு,சிக்னல் நிறுவினால், அங்கு நிலவும் நெரிசல் குறையும். பாலத்தின் கீழ், பழைய பஸ் ஸ்டாண்டின் முன், பின் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற வேண்டும். சாலை விதி மீறி, வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுண்டானாவை சுற்றி விளம்பர பலகை வைக்க அனுமதிக்க கூடாது. பஸ் ஸ்டாண்டுக்குள் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களுக்குஅபராதம் விதிக்க வேண்டும்.